இலங்கை போக்குவரத்து சபையின் விபத்தினை சித்தரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இல்லம்!

யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றுமுன்தினம் புதன்கிழமை (13) அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றது. இதில் பாரதி இல்லம் 696 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.

இல்ல அலங்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டும் இல்லம் ஒன்று விளையாட்டு போட்டியில் அமைக்கப்பட்டிருந்தமை அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்த பாரதி இல்லம் அலங்கரிப்பிலும் முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. இதில் பாரதி இல்லம் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான மாதிரியை இல்லமாக அலங்கரித்திருந்தது.

காங்கேசன்துறை- யாழ்ப்பாணம் 769 வழித்தடங்களில் பயணிக்கும் அரச பேருந்து ஒன்று நடைபாதையில் மாணவர் ஒருவரை மோதி தள்ளுவதை சித்தரிக்கும் முகமாக இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற சாரதிகளால் இவ் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை சுட்டிக்காட்டும் விதமாக இவ் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

VideoCapture 20240315 091339

VideoCapture 20240315 091344

VideoCapture 20240315 091351

VideoCapture 20240315 091430

VideoCapture 20240315 091447

Comments are closed.