இலங்கையில் நேர்ந்த கோர விபத்து-22 வயது வெள்ளைக்கார அழகி பலி..!

0 12

நெலுவ, லங்காகம வீதியில் கொலந்தொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்ஸ் நாட்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நெலுவவிலிருந்து லங்காகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று எதிரே வந்த காருக்கு வழிவிட்டு வீதியில் நிறுத்தப்பட்டதால், கார் அதிவேகமாக வந்து வேன் மீது மோதியது.

அங்கு வேன் முன்னோக்கி தள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது வேனுக்குள் இருந்த வெளிநாட்டு பெண் வெளியே பாய்வதற்கு முற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 22 வயதுடைய பிரான்ஸ் நாட்டு பிரஜை என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.