இலங்கையின் திறந்த அரச பங்குடைமையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகல்.!

சிவில் சமூக வெளியை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (ழுபுP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதமொன்றையும் இந்த அமைப்புகள் அனுப்பியுள்ளன.

இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தினை (NயுP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புகள் (ஊளுழுள) சிவில் கூட்டு முயற்சிகளிலிருந்து விலகுவதற்கு ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.

இது அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள்இ குறிப்பாக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை (ழடெiநெ ளயகநவல டிடைட) நிறைவேற்றுவது மற்றும் பரவலான எதிர்ப்பையும் மீறி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்இ சிவில் சமூக வெளியை அடக்குவதற்கும்இ பொது மக்களின் அடிப்படை சுதந்திர மீறலுக்கும் எதிராக இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு எம்மை நிர்ப்பந்தித்துள்ளதாக இந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்த முடிவானது குழுவாக தீர்க்கமான முறையில் பரிசீலிக்கப்பட்ட பின்னர்இ இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆபத்தான முன்னெடுப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் சிவில் சமூக அமைப்புகளின் இணைப்பாளர்கள் என்ற வகையில்இ ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (வுசயnளியசநnஉல ஐவெநசயெவழையெட -வுஐளுடு) மற்றும் சர்வோதய ஷ்ரமதான இயக்கம் (ளுயசஎழனயலய ளூசயஅயனயயெ ஆழஎநஅநவெ) இந்த கூட்டு முடிவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளாதாக தெரிவித்துள்ளன.

இந்த அமைப்புகள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் பின்வருமாறு;

திறந்த அரசாங்க பங்குடைமை (ழுபுP) என்பது அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்இ குடிமக்களை மேம்படுத்துதல்இ பொது பிரச்சினைகளில் பொது மக்களின் பங்களிப்பை உறுதி செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல பங்குதாரர்களின் முயற்சியாகும்.

தற்போதுஇ 70 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பெருகிவரும் உள்ளூர் அரசாங்கங்கள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புக்கள் திறந்த அரசாங்க பங்குடைமையின் (ழுபுP) உறுப்பினர்களாக உள்ளன. திறந்த அரசாங்க பங்குடைமையின் (ழுபுP) கீழ்இ சிவில் சமூகத்துடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் நல்லாட்சிக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்குஇ பங்குபெறும் அனைத்து நாடுகளும் பல பங்குதாரர்கள் செயல்முறையின் மூலம் இரண்டு ஆண்டு தேசிய செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

இலங்கை 2015 முதல் திறந்த அரசாங்க பங்குடைமையில் (ழுபுP) அங்கத்துவம் பெறுவதன் மூலம் சர்வதேச ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதன் பின்னர்இ இரண்டு தேசிய செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டனஇ ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. இவ்வாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.