இரும்பு பெட்டியால் யாழ் நகரில் ஏற்ப்பட்ட பதற்றம்..!

172

யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17) காலை கைவிடப்பட்ட நிலையில் இரும்பு பெட்டியொன்று காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு விரைந்து பெட்டியை சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த பெட்டிக்குள் இயந்திர சாவிகள் காணப்பட்டமை தெரியவந்ததையடுத்து நிலைமை சுமூகமானது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பெட்டியை அங்கிருந்து கொண்டு சென்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.