இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? 02.02.2024

0 15

மேஷம் (Aries)

இன்றைய நாள் மேஷராசிக்கு சற்று கடினமானதாக இருக்கும். உங்கள் பேச்சில் சற்று வேதனையும் பதட்டமும் இருக்கும். நீங்கள் செய்யும் பிரார்த்தனை உங்களுக்கு நல்ல பலனைத்தரும்.

உங்களுடைய பணியில் சற்று சோம்பல் காணப்படும். நல்ல திட்டமிடல் இருந்தால் நீங்கள் உங்களுடைய வேலையை சிறப்பாக செய்ய முடியும்.

உங்களுடைய ஈகோ பிரச்னை தரக்கூடியது. உங்களுடைய துணையுடன் நீங்கள் சற்று ஈகோ இல்லாமல் இருப்பது நல்லது. உங்களுடைய அணுகுமுறை சற்று புரிதலுடன் இருந்தால் நல்லது.

மனக்கவலை தேவையில்லாத செலவுகளால் வரக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு சற்று செலவுகள் வரக்கூடும்.

தோள்வலி மற்றும் மூட்டுவலி வர வாய்ப்புள்ளது. நீங்கள் தியானம் செய்ய வேண்டும். இது உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ரிஷபம் (Taurus)

இன்றைய நாள் உங்களுக்கு சற்று மோசமானதாக இருக்கும். நீங்கள் இதை சமாளிப்பதற்கு தைரியத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். நீங்கள்தான் எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மற்ற வேண்டும்.

உங்களுடைய வேளையில் நீங்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பீர்கள். நீங்கள் உங்களுடைய பணியில் வெற்றி காண்பீர்கள்.

உங்களுடைய நிதி நிலைமை சற்று குறைவாக இருக்கும். பதட்டப்படுவது மற்றும் கோபப்படுவது உங்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும்.

மிதுனம் (Gemini)

இன்றைய நாள் உங்களுடைய வளர்ச்சிக்கு சாதகமானதாக இருக்கும். உங்களுடைய முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உங்களுடைய மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது.

உங்களுடைய வேளையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பண இழப்பு ஏற்படுவதைக்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய அலட்சியத்தை தவிர்ப்பது நல்லது. கவனமாக இருப்பது உங்களை மேம்படுத்தும்.

கடகம் (Cancer)

இன்றைய நாள் உங்களுக்கு சுறு சுறு பானதாக இருக்கும். உங்களுடைய தைரியம் மற்றும் உறுதியான மனநிலை காரணமாக அதிகமான வெற்றிகளை பெறுவீர்கள். இது உங்கள் திறமையை மேம்படுத்தும். உங்களுடைய இலட்சியத்தில் வெற்றி அடைவீர்கள்.

உங்களுடைய பணிகளில் சற்று தாமதம் ஏற்படும். உங்களுக்கு வரக்கூடிய பணவரவில் மகிழ்ச்சி அடைவீர்கள். நாளைய நாள் உங்களுடைய துணையுடன் சிறப்பானதாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலை உங்களுடைய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

சிம்மம் (Leo)

இன்றைய நாள் உங்களுக்கு சற்று அழுத்தமான நாளாக இருக்கும். உங்களுடைய அணுகு முறை சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய தன்னம்பிக்கை சற்று குறைந்து காணப்படலாம். இதனால் உங்களுடைய வெற்றிகளை அடைவது கடினமானதாக இருக்கும். உங்களுடைய வீட்டில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். நீங்கள் சற்று அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும்.

வீணான செலவுகள் செய்வதற்கு வைப்புள்ளது. உங்களுடைய செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உங்களுடைய ஆரோக்கியம் சற்று குறைந்து காணப்படும். நீங்கள் உங்களை உற்சாக படுத்தி கொள்ள வேண்டும்.

கன்னி (Virgo)

இன்றைய நாள் உங்களுக்கு கவலையான நாளாக உள்ளது. உங்களுடைய கவலைகளை போக்குவதற்கு நீங்கள் தான் சிறந்தவர். உங்களுடைய வேலைகளை நீங்கள் சரி வர செய்தால் கவலைகளில் இருந்து நீங்கள் விடுபட வாய்ப்புள்ளது. உங்களுடைய அலுவலக பணிகளில் தவறுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் சற்று கவனமாக இருந்து செயல்பட வேண்டும். செலவுகள் பெருகி காணப்படும்.

துலாம் (Libra)

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்புகளை தரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்களுடைய தொழிலில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

விருச்சகம் (Scorpio)

விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய தொழிலில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உடல் நிலை சிறப்பானதாக இருக்கும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசி நேயர்களே, உங்களுடைய இன்றைய  நாள் சிறப்பானதாக அமைந்துள்ளது. நீங்கள் உங்களுடைய தொழில் மற்றும் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களை தேடி வரும். நாளைய நாள் உங்களுடைய தொழிலை புதிய முயற்சியை பெறுவீர்கள். உடல்நிலையில் நல்லதொரு முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் (Capricorn)

மகர ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு வெற்றியை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. நீங்கள் உங்களுடைய வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெறுவீர்கள். நீங்கள் உங்களுடைய குடும்பத்துடன் ஒற்றுமையாக செயல் படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய உடல் உங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை தரும்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் சிறப்பான முன்னேற்றத்தை தரும். உங்களுடைய தொழிலில் நீங்கள் தொடங்கும் புதிய முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். நிறைய லாபத்தை தரும் நாளாக நாளைய நாள் அமைந்துள்ளது. உங்களுடைய தொழிலில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். உங்களுடைய உடல்நிலை சிறப்பானதாக இருக்கும்.

மீனம் (Pisces)

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களை தேடி வரும். உங்களுடைய தொழிலில் நீங்கள் அதிக லாபத்தை பெறுவீர்கள். உங்களுடைய உடல்நிலை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.