இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவரும் – அனுர.!

101

NPP யின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகக் கூறும் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்காலத்தில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும் அங்கு மேலும் மேலும் ஆச்சர்யங்கள் ஏற்படும் என்றும் கூறினார்.

‘எங்கள் இந்திய விஜயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவோ, ஜனாதிபதி ரணில் மூலமாகவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவின் மூலமாகவோ நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். நாங்கள் அமைதியாக இருந்தோம். அவர்கள் எங்கள் இந்திய பயணத்தை அறிந்து வியந்தனர். அவர்களால் மட்டுமே இந்தியாவை அவ்வாறு சமாளிக்க முடியும் என அவர்கள் நினைத்தார்கள். மேலும் மேலும் இதுபோன்ற ஆச்சரியங்கள் நிகழும் ஒரு சகாப்தம் தொடங்கியுள்ளது’ என்று அவர் கூறினார்.

பெண்கள் மாநாட்டின் இந்த கருத்தாக்கம் குறித்து எதிர்க்கட்சிகளும் வியப்படைந்துள்ளதாகத் தெரிவித்த திஸாநாயக்க, பெண்களின் விழிப்புணர்ச்சி இவ்வாறாக ஏற்படும் என அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் கூறினார்.

மகிந்த-சந்திரிகா, மைத்திரிபால-மகிந்த, ரணில்-சந்திரிகா போன்ற அரசியல் எதிரிகளும் கூட ஒரே மேடைக்கு வரவுள்ள நிலையில் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு எதிராக பல்வேறு கூட்டணிகள் களமிறங்குகின்றன என்றார்.

ரணிலுடனான தனிப்பட்ட போட்டியின் காரணமாக சஜித் அந்த கூட்டத்தில் சேரவில்லை. இல்லையேல் அவரும் அதே கூட்டத்தில் இணைந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.