ஆற்றில் நீரடியவர்களிற்கு நேர்ந்த கதி

0 10

தென்னிலங்கையில் ஆற்றில் மூழகி யுவதிகள் உட்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனும் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

15 மற்றும் 16 வயதுடைய இரு மாணவிகளும் 17 வயதுடைய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். களு கங்கையில் நீராடுவதற்காக சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சக மாணவர் ஒருவரின் தாயாரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர்களே இவ்வாறு நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவிகளில் ஒருவர், உயிரிழந்த மாணவனின் காதலி எனவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த இரண்டு மாணவர்கள் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

முதலில் இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கியதாகவும், அவர்களை காப்பாற்ற மாணவன் முயன்றபோது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.