அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி.!

07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம்இ சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

இதேவேளைஇ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

Comments are closed.