அத்வானிக்கு பாரதரத்னா விருது- இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

0 14

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரத ரத்னா விருது  அறிவிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கௌரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை மந்திரியாகவும், தகவல் தொடர்பு துறை மந்திரியாகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார்.  நாடாளுமன்றத்தில் அவர்  எப்பொழுதும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்” என்று அத்வானியை மோடி வாழ்த்தியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.