அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படாத மருந்துகள்.!

91

பல மில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில் கொள்கலன் முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சிவ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் வினைத்திறன் இன்மையினால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் கடந்த செப்டெம்பர் மாதம் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடாக இந்த மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது வெலிசர, வத்தளை மற்றும் களனி பிரதேசங்களில் உள்ள கொள்கலன் முனையங்களில் இந்த மருந்துகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மெரோபெனம் (Merapenum) போன்ற பலமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உட்பட பெருமளவான மருந்துகள் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் சுகாதார அமைச்சு வினவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கொள்கலன் முனையங்களில் பாதுகாப்பற்ற முறையில் மருந்துகளை களஞ்சியப்படுத்துவது குறித்து தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.