Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: விரைவில்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை தெரிவித்தார். […]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு இலங்கை கடவுச்சீட்டை வௌியுறவு அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.இதனால் அவர் மீது விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது/கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ”நாட்டின் அதியுயர் சட்டத்தை மீறி இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார். அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளதுடன், சர்வாதிகார ஆட்சியை நோக்கி […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மிக விரைவில் இலங்கை வருவார் என்றும் இது தேசிய நல்லிணக்கத்தின்…