Browsing: ஐனாதிபதி

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி; சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி; தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

இந்த வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் ஜனாதிபதி தேர்தல் கூட்டணி தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் தீர்மானத்தை இதுவரை தான் எடுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு ஆதரவாக சந்திரிகா களமிறங்குகிறார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையை பொறுப்பேற்கவுள்ளார்  என கடந்த […]