Browsing: மக்கள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை  தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 9:00 மணியளவில் அம்பன் பிரதேச வைத்தியசாலை முன்பிருந்து ஆரம்பமான போராட்டம் மணல் அகழ்வு நடைபெறும் இடம் வரை சென்று கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோசமிட்டு வருகின்றனர். 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் […]

புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் , மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு , மூன்று தினங்களாக தொடர்ச்சியாக விவசாய காணி, வயல்காணி, தோட்டதோட்டக் காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானைகள் வாழ்வாதாரப் பயிர்களான நெல், தென்னம்பிள்ளை, பயிற்றை, வெண்டி, கச்சான் என்பவற்றை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இம்மக்கள் தமது […]

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தியை பதிவு செய்துள்ள முறைமை சட்டவிரோதமானது எனவும் இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினிவித பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை நிராகரித்து தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப் பேராணை மனு மீதான விசாரணையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் […]

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்துள்ளனர்.மேலும் கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமல் கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்கு மடு வலயக் கல்விப் பணிப்பாளரின்   செயல்திறனற்ற தன்மையே காரணம் என கள்ளியடி கிராம மக்கள், பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு கல்வி வலயத்திற்கு […]