Browsing: யாழ்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய விஜயத்தின் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திரக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதியுடன் இந்திய செய்திச் சேவை இந்த நேர்காணலை நடத்தியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார். “நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கோசலை மதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எக்காரணம் கொண்டும் […]

இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும், அதாவது sea of Sri Lanka என்று சொல்லப்படுகின்ற கடற்பரப்பை ஊடறுத்து ஒரு கடல் வழிப் பாதையை உருவாக்கி அதை இந்தியாவிடம் தாரை வார்க்கக் கூடிய ஒரு செயற்பாட்டை ஊடக […]

இந்திய முதலமைச்சர் எங்களுடைய படகுகளை தங்களுடைய எல்லைக்குள்ளே அனுமதித்து அங்கு மீன் பிடிப்பதற்கு வழிவகுப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. அதனை செய்ய முன்வராமல் தங்களுடைய மீனவர்களது நலன் கருதி எங்களுடைய வளங்களை அழித்து, எங்கள் வாழ்வாதாரத்தை சூறையாடி, எங்களை பட்டினிச்சாவிலே இட்டுச் செல்வது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மீது கருணை இல்லாத அல்லது துரோகமான செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் […]

கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில்  இன்று (11) காலை ஐந்து மணியளவில் நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள்  மோதி விபத்துக்குள்ளானது. பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை அதனாலேயே […]

குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றம் நடாத்திய கலைவிழா 08.02.2024வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில், இளையோர் மன்ற தலைவர் செல்வன் விக்டர்குமார் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைகழக கிறிஸ்தவ கற்கைகள் விரிவுரையாளர் அருட்பணி மவி.இரவிச்சந்திரன் அடிகளார் பிரதம விருந்தினராகவும் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகர் திரு ஐயாத்துரை சந்திரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் யாழ் புனித மரியாள் […]

இணுவிலில் உள்ள சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை விழா, இணுவில் பொது நூலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், கிராமிய நடனம், உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு வைபவமும் இடம்பெற்றது. ம.கஜந்தரூபன் அவர்கள் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ச.கிருபானந்தன், நா.கிருபாகரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சி.அழகேசன், […]

கடந்த 12.01.2024 அன்று வீதி விபத்தின் போது உயிரிழந்த வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த அமரர் அன்ரன் பிலிப்பின்தாஸ் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார். அவருடைய நினைவுகூரும்வகையில் அவர் உயிரிழந்த அதே இடத்தில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார், […]

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கான காரணம் தனிப்பட்ட காரணங்களா, பணிச் சுமையா என்பது தெரியவரவில்லை.