Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: யாழில்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பின்று பிற்பகல் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது கடந்த புதன்கிழமை ஆலய சூழலில் குளிர்களி விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் குளிர்களிக்குள் தவளை ஒன்று காணப்பட்டது. அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் ஐஸ் கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். […]
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர். வைத்தியசாலைக்கு நேற்று மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர். பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து […]
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர் அண்மைக்காலமாக கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் இவரை மருதங்கேணி பொலிசார் தேடிவந்தனர்.இன்றும் அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது மனைவி வேறு இடத்தில் […]
இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கோட்டையில் புதன்கிழமை (14) தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் பா.கபிலன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் வளவாளராக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் மார்க்கண்டு அருட்செல்வன் பங்குபற்றினார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.
முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பேருந்து யாழ்ப்பாணம் – தென்மராட்சி – A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் […]
அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த விபத்து இன்று மாலை யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
ஆலய பிணக்கு ஒன்றினை அடுத்து, வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தம் (தம்பா) நீராகாரம் ஏதுமின்றி கடந்த திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதம் இன்று காலை நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடாத்தாமாறு வலியுறுத்தி […]