Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: கைது
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை […]
தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறுகல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகளும் மற்றும் மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்கு குழாய்கள் 03 கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி மற்றும் ஈயக்குண்டுகள் 12 யானை வெடி 3 வெடிமருந்து என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அன்று 14.02.2024 சுற்றிவளைப்பை மேற்கொண்ட தர்மபுரம் போலீசார் சந்தேகநபரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய […]
சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவிடம் உறுதி அளித்துள்ளார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் தலைமை காரி ஆலயத்தில் இடம் பெற்ற இலங்கை சட்டமா அதிபருக்கும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க குழுவினர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பின் முடிவில் குறித்த பணிப்புரை சட்டமா […]
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதே தோட்டத்தை சேர்ந்த 60 மற்றும் 40 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது பலதடவை குறித்த 60 வயது நபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை மற்றும் அதற்கு 40 வயதுடைய நபர் உதவி செய்துள்ளமை […]
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டார். தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே தெல்லிப்பழை பொலிஸாரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை குற்ற விசாரணைத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் தீங்கிழைக்கும் வகையில் இந்த அவதூறு பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “அவர் சமூக ஊடகங்கள் மூலம் எங்களை அவதூறாகப் பேசினார். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் ரூபா 4 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதற்காகத்தான் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த பரப்புரைகள் அரசை […]
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிம் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது என்றார். சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவர் சமூக […]
கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விகாரையின் பராமரிப்பில் இருந்த அசேல என்ற யானைக்கு விஷம் வைத்து கொல்வதற்கு முயன்றார் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தர்பூசணி (Watermelon) காய்க்குள் விஷத்தை கலந்தே இந்த நபர் அசேல என்ற யானைக்கு கொடுப்பதற்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கண்டி, கட்டுகித்துல, பன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வேறு சில சம்பவங்களுக்காக கண்டி […]
அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார். சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.