Browsing: இலங்கை

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால், கடந்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு […]

மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) தம்பதியினரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, ​​வீட்டின் அறையில் கட்டிலில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது. […]

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் […]

வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்ற போது பின் தெர்டர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர், குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரி விசாரிப்பது போன்று கதைத்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை […]

கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய குறித்ந சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lk-வின் பகுப்பாய்வு அறிக்கையில், 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்தியபோது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் பகுப்பாய்வின் […]

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் உடலில் விஷம் பரவிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் அதிகாரிகளால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் வழங்கிய பால் பக்கெட்டை பருகிய பின்னர் […]

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவை திணைக்களத்தினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கையில் 100% வெற்றியாக முன்னெடுக்க வேண்டும். தற்பொழுது குளங்களின் நீர்மட்டம் அடைவு மட்டத்தில் காணப்படுவதன் காரணமாக உரிய காலத்தில் சிறுபோக செய்கை […]

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கர்ப்பிணிபெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான பற்றாக்குறை தொடர்வதாக தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை என தாய்மார்கள் குற்றம் சாட்டுவதோடு தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மற்றும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். […]