28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைத்தூக்கியுள்ளது

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைத்தூக்கியுள்ளதாகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம் என பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இதேவேளை, 69 இலட்ச மக்களாணை எம்முடன் தான் உள்ளதென்றும் தேசிய கூட்டணியாக எழுச்சிப் பெறுவோம் என்றும் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவோம் என ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி  எனற புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று வியாழக்கிழமை (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் பொதுச் செயலாளராக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பத்து அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.

Related posts

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக இன்னிசை விருந்தும், உதவித் திட்டங்களும்

User1

ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா

User1

வவுனியாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

sumi

Leave a Comment