28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர்கள் தினம் இன்று

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர் கொண்டாட்டம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது.

அதன்படி, அதன் முக்கிய நிகழ்வு இன்று காலை கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கதிர்காமம், அம்பாறை மற்றும் அநுராதபுரம் முகாம்களிலும் போர்வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு இதே நாளில், வடக்கு பிராந்தியத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்தனர்.

அந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் போர்வீரர் தினம் நினைவுகூரப்படுகிறது.

Related posts

பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கோள் !

User1

இளைஞனின் காலை முறித்த பொலிசார்!! களத்தில் குதித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

sumi

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கவனிப்பாரற்று ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி

sumi

Leave a Comment