28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைகிறது எரிபொருள் விலை

மாதாந்த விலை சூத்திரத்தின்படி, (31) இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

லங்கா வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 307 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை என பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

Related posts

சஜீத் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவு இருப்பதால் நாமும் ஆதரவளித்தோம்_மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் எம்.பி

User1

யுக்திய நடவடிக்கையின் போது 677 சந்தேக நபர்கள் கைது

User1

கல்வி அமைச்சின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் G.C.E.A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

User1

Leave a Comment