கற்பிட்டி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வண்டியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இனைந்து நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரவு கரம்பை சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோது சுமார் 650 கையடக்கத் தொலைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கையடக்கத் தொலைப்பேசிகள் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் கெக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைப்பேசிகள் மறும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியையும் நுரைச்சோலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.