• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்கள் ஆதரவளிக்க வேண்டும்:  ஜனாதிபதி தெரிவிப்பு!

admin by admin
August 27, 2024
in இலங்கை செய்திகள்., நாட்டு நடப்புக்கள்
0
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்கள் ஆதரவளிக்க வேண்டும்:  ஜனாதிபதி தெரிவிப்பு!
Share on FacebookShare on Twitter

நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும் முறியடிக்கக் கூடிய திறமையான அணி தன்னிடம் இருப்பதாகவும், அரசாங்க நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். 

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற இலங்கை தொழில் நிபுணர்களின் அமைப்பான OPA வின் 37 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு   வலியுறுத்தினார்.  

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அதுவே ஒரே வழியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இலங்கைக்கு கணிசமான நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வருடாந்த மாநாடு “இலங்கையின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் தொழில் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பான OPA,  60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்குள் சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கை தொழில் நிபுணத்துவ அமைப்பின் வருடாந்த சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையின் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பு (OPA) 60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்கு சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய தொழில் வல்லுநர்களின் அமைப்பாகும்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  

“மத்திய வங்கி ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலில் உக்கிரத்தன்மையை தௌிவுபடுத்தினார். அதிர்ஷ்டவசமாக, இரண்டு முக்கிய காரணங்களால் விரைவான பொருளாதார மீட்சியை அடைந்தோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக பாடுபட்ட கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலமான குழுவொன்று என்னிடம் இருந்தது. இரண்டாவதாக, தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து, முக்கியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளோம். 

கிரீஸில் ஏற்பட்ட நிலைமை இலங்கையில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் உறுதியாக இருந்தோம். கிரீஸ் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதால் கிரீஸின் பொருளாதாரம் மேலும் சரிந்தது. எனவே கிரீஸ் மீண்டு வர சுமார் பத்தாண்டுகள் ஆனது. கூடிய விரைவில் குணமடைவதே எனது இலக்காக இருந்தது. நாம் இப்போது அதை செய்துள்ளோம். 

நிலையான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடனான நமது ஒப்பந்தத்திற்கு இணங்குவது மிகவும் முக்கியமானது. அந்த உடன்பாட்டை எட்டுவது எளிதல்ல. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பல்வேறு கடன் வழங்கும் குழுக்கள் உட்பட பல தரப்பினருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். 

அவற்றில் பெரிஸ் கழக நாடுகளும் இருந்தன. சீனா வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. மேலும் எமில்டன் ரிசர்வ் வங்கியால் எங்களுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இன்னும் தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 

சவால்கள் இருந்தபோதிலும், நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் நெருக்கடியிலிருந்து எங்களை வெளியே கொண்டு வந்து, மக்களுக்கு வளர்ச்சி மற்றும் நிவாரணம் தொடர்பிலான நம்பிக்கையை அளித்துள்ளது. உதாரணமாக, எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. ஏனைய துறைகளிலும் சாதகமான பிரதிபலன்கள் காணப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் அல்லது அதிலிருந்து விலக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துள்ள ஒப்பந்தமே நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி. இது எங்களுக்கு கணிசமான நிவாராணத்தை அளித்துள்ளது. 

நாம் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக மாற வேண்டியது அவசியம். அதற்காவே பொருளாதார மாற்றச் சட்டம் , பொது நிதிச் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம், அரச கடன் முகாமைத்துவச் சட்டம்  போன்ற பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, முதன்முறையாக ஒரு கொள்கையை சட்டமாக ஆக்கியுள்ளோம். அவ்வாறிருக்க, தலைமை மாற்றம் அல்லது ஆட்சி மாற்றத்தினால் அதனை இலகுவாக மாற்ற முடியாது. 

நாம் இப்போது போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவது குறித்து  கவனம் செலுத்த வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு, ஆடை கைத்தொழில் போன்ற துறைகளில் அதிக உற்பத்தித் திறன் தேவைப்படுகிறது. அவற்றை கொண்டு உயர்தரச் சந்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும். 

மேலும், உலக அளவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பயன்படுத்தி விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். தற்போது பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படாத சுமார் 300,000 ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படலாம். நெல் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். விவசாயம் மற்றும் பால் பண்ணை மற்றும் புதிய பயிர் உற்பத்திக்காக பெருமளவான காணிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளோம். 

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் ஒரு இரவுக்கான வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, சுற்றுலா மற்றொரு முக்கிய துறையாக மாறுகிறது. விநியோகச் சங்கிலிகளை விரிவுபடுத்துதல், உயர்-தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஆரம்ப பிரவேசம் ஆகியவையும் முக்கியமானவை. அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ இருக்கிறோம். 

எதையாவது தொடங்குவதில் தான் சவால் இருக்கிறது. அதற்கான திறமை எங்களிடம் உள்ளது. சரியான சூழல் இருந்தால் எமக்கு வெற்றி பெறலாம். நாங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தான்  தீர்மானிக்க வேண்டும். எனவே நீங்கள் சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.     

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை தொழிற்சங்கங்களின் அமைப்பின் தலைவர் சரத் கமகே, ஓபிஏ 37வது உச்சி மாநாட்டுக் குழுவின் தலைவரும்,  அமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தலைவருமான சுஜீவ லால் தஹநாயக்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் திசர டி சில்வா மற்றும்  அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

Related Posts

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

by selvan
June 23, 2026
0

யாழ் - பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற்  தரவைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உருவான கரும்புகையால் சில நிமிடங்கள்...

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

by selvan
June 23, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர்...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

by selvan
June 23, 2026
0

இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம்...

சுரேஷ் சலேவை கைது செய்தமை ஒரு கேலிக்கூத்தான விடயம் – சரத் வீரசேகர சாடல்!

by selvan
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு, வெறும் அரசியல் பழிவாங்கலாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர...

நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்கள் உருவாக்கியுள்ளனர்!

by selvan
June 23, 2026
0

வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம்...

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த தீர்மானம்!

by selvan
June 23, 2026
0

வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்களைச் சேகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

by selvan
June 23, 2026
0

இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை...

செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!

செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!

by Mathavi
June 23, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

by Mathavi
June 23, 2026
0

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகள் உடன்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இப்ராஹிம் என்பவரைப் பாதுகாப்பதற்கே தற்போதைய அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி