27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் அம்புலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர் – நடந்தது என்ன ?

வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் தன்னை கடத்திச் செல்வதாக உணர்ந்து காவு வண்டியில் இருந்து வைத்தியர் குதித்தமையால் பதற்றம் ஏற்பட்டு சாரதி மீது தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து வைத்தியர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டதுடன் நோயாளர்காவு வண்டியில் இருந்த சாரதி உட்பட இருவர் நெளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் நோயாளர் காவு வண்டியும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. 

வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

 வவுனியா வைத்தியாசாலையில் இருந்து 4ம் கட்டைப் பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு செல்வது வழமை. குறித்த உணவுகளை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி பயணித்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார். 

குறித்த ஆயுள்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக நெளுக்குளம் நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிஸிற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளனர்  

இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள். 

குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பியதாகவும் இதன்போது சகோதரமொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக தன்னை கடத்துவதாக நினைத்து குதித்தாக வைத்தியசாலையின் ஒரு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது 

இதேவேளை நோயாளர் காவு வண்டியின் பயணிக்கும் விளக்க அட்டையில் (running chart) குறித்த ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் வவுனியா பொதுவைத்தியசாலைக்கும் இடையில் சென்று வருவதற்கான மொத்த தூர அளவு 20 கிலோமீற்றராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால உண்மையாகவே 16கிலோ மீற்றர் தான் தூர அளவு என்பதனால் அதனை சமப்படுத்துவதற்காக வேப்பங்குளத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் நெளுக்குளம் திசைக்கு சென்று குழுமாட்டுச்சந்தியிலிருந்து மருக்காறம்பளை ,தாண்டிக்குளம் பகுதிகள் ஊடாக வவுனியா வைத்தியசாலைக்கு செல்வதனால் 20 கிலோமீற்றர்கள் சமனாகும் அதற்காகவே நோயாளார் காவு வண்டியை திருப்பியதாகவும் இதனால் குழுப்பமடைந்த பெண் வைத்தியர் அச்சத்தில் கீழே குதித்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர் முறைப்பாட்டை மீளப்பெறுவதற்கான முயற்சிகளும் நேற்றைய தினம் இரவு இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது

Related posts

திருமலை கின்னியா பகுதியில் வரவுள்ள பாரிய மாற்றம்..!

sumi

8 இந்திய மீனவர்கள் கைது 

User1

கிளிநொச்சியில் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது

sumi

Leave a Comment