விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூட்டை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்நான்காவது மக்கள் வெற்றிப் பேரணி சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (25) முற்பகல் பொலன்னறுவை (Polonnaruwa) ஹிங்குராங்கொட (Hingurankota) நகரில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.