27.9 C
Jaffna
September 16, 2024
உலக செய்திகள்

பூமி திரும்புவரா? சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பெப்ரவரியில் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டாா்லைனா் விண்கலம் கடந்த ஜூன் 5-ஆம் திகதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

பின்னர் அவா்கள் இருவரும் அதே விண்கலம் மூலம் கடந்த ஜூன் 14-ஆம் திகதி மீண்டும் பூமி திரும்புவதாக இருந்தது. இருந்தாலும் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அவா்கள் இருவரும் ஜூன் 26ஆம் திகதி பூமி திரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அந்தத் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பெப்ரவரியில் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தை யாருமின்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பெப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

Related posts

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 

User1

இலங்கை பெண்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு !

User1

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

User1

Leave a Comment