எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்த நகர்வுகளை இலங்கையின் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ள நிலையில் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை பெறுவதற்கான போட்டி நிலைகளும் ஆரம்பமாகியுள்ளன.
தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்னரே வெளிநாட்டு உறவுகளில் அநுரகுமார கவனம் செலுத்தியதோடு அதற்கான அடித்தளங்களை பலமாக பதித்துள்ளார்.
அதேபோல நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சர்வதேச உறவுகளை தனது அரசியல் வரலாற்றின் மூலம் நிலைநிறுத்தியுள்ளார்.
இங்கு பிரதான வேட்பாளராக கருதப்படும் சஜித் பிரேமதாச வெளிநாட்டு அரசியல் ரீதியான உறவுகளுடன் ஆர்வம் காட்டியுள்ளாரா? என்ற கேள்விக்கு பதிலளிப்பது கடினமான ஒன்று.
உள்நாட்டு அரசியலிலும் கட்சித்தாவல்களின் மூலம் பெரும் சிக்கலை சந்தித்துள்ள சஜித் பிரேமதாச வெளிநாட்டு ரீதியிலான உறவுகளை மேற்கொள்வதில் பின்வாங்கி வருகிறார்.
இவ்வாறான கேள்வி நிலைகள் தொடர்பிலும், இலங்கையின் எதிர்கால அரசியல் மற்றம் எதனை அடிப்படையாக கொண்டது என்பது பற்றியும் விரிவாக ஆராய்கிறது ஊடறுப்பு நிகழ்ச்சி…