• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயக்க கிழக்கு ஆளுனர் முயற்சி: கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

admin by admin
August 16, 2024
in இலங்கை செய்திகள்., திருகோணமலை செய்திகள், யாழ் செய்திகள்
0
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயக்க கிழக்கு ஆளுனர் முயற்சி: கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு
Share on FacebookShare on Twitter

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவாக கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களும் இணைந்து செயற’படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருக்கோணேஸ்வரம் என்பது சைவ மக்களுடைய வரலாற்று தொன்மை மிக்க ஒரு அடையாளம். தமிழர்களின் பழமையான வரலாற்றை பறை சாற்றும் அடையாளமாக விளங்குகின்றது. அவ் ஆலயத்தை முழுமையாக கையகப்படுத்தி சிங்கள பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டும் என பேரினவாதிகள் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரும், அதன் மக்களும் அதற்கு எதிராக கடுமையதாக போராடி வருகிறார்கள். இவ்வாறான நிலையில் அந்த ஆலய நிர்வாக சபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி ஆலய நிர்வாக சபை மீது சேறுபூசி அந்த நிர்வாக சபையை அகற்றி விட்டு ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கான சதி முயற்சிகள் நடைபொறுகிறது.

அண்மைக் காலத்தில் அந்த ஆலய நிர்வாகத்தில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பூதாகரமாகபப்டுத்தப்பட்டுள்ளது. ஆலய பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் முகமாக பரப்புரைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுனருடைய அலுவலகத்தால் இவ்வாறான செய்திகளை பரப்பி அவதூறைகளை ஏற்படுத்தி ஆலய நிர்வாகத்தினருக்கு நெருக்கடியை  கொடுத்து அவர்கள் தாமாகவே அதில் இருந்து விலகிச் செல்கின்ற அல்லது பொது மக்களை தூண்டி அவர்களை அகற்றிவிட்டு அதனை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆளுனர் அலுவலம் செய்து கொண்டிருக்கின்றது. மிக நீண்ட காலமாக நிர்வாக சபை கட்டுக்கோப்புடன் செயற்பட்ட நிலையில் அதனைக் குழப்பி அதற்குள் நுழைய அரச தரப்பு தீவிரமாக முயல்கிறது. அந்த முயற்சியின் ஒரு கருவியாக ஆளுனர் செந்தில் தொண்டமான் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

இந்த நிர்வாக சபையை கலைத்து புதிய இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்த ஆளுனர் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இடைக்கால நிர்வாகத்தில் தன்னையும் ஒரு அங்கத்தவராக இணைக்க வேண்டும் என அவர் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் ஆலய நிர்வாகத்தாலும், வழிபாட்டு சபையாலும்  குற்றம் சாட்டப்பட்டுளடளது. ஆலய நிர்வாகத்திற்கு தெரியாது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக ஆளுனர் அலுவலகத்தால் கூட்டம் கூட்டப்பட்டு அது குழப்பத்தில் முடிவடைந்தது.

திருகோணேஸ்வரர் ஆலயத்தை கையகப்படுத்துவதற்கும், அதனை சீரழிப்பதற்கும் ஆளுனர் முன்னெடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அரதசாங்கத்தின் முகவராகவும், அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்து கொண்டு அவர் நிர்வாகத்தில் நுழைவதை ஏற்க முடியாது. சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்ற முதுகெலும்பு அற்ற ஆளுனர் ஆலயத்தை தாரை வார்க்க எடுக்கும் முயற்சிகளை ஏற்க முடியாது.

ஆளுனர் அங்கு இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கூறும் கருத்துக்கள் கூட அடிப்படையற்ற கருத்துக்கள். அது தொடர்பில் உண்மையான விசாரணை தேவை. தொல்பொருட் திணைக்களத்தை வலிந்து இழுக்கும் செயற்பாட்டை ஆளுனர் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

Related Posts

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

by selvan
June 24, 2026
0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

by selvan
June 24, 2026
0

"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது" என நாடாளுமன்ற...

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி...

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

by selvan
June 24, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்...

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

by selvan
June 24, 2026
0

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி