தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல், இலக்கம் 298, யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கா பிரதான தேர்தல் அலுவலகமும்,
தொடர்ந்து இலக்கம் 362, பிரதான வீதி கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் மற்றுமொரு தேர்தல் அலுவலகமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



