• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழ். மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் 

admin by admin
August 15, 2024
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
யாழ். மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் 
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மடம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். 

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை,  பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011  ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

எனினும், மந்திரி மனை அமைந்துள்ள காணி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக காணப்படுகிறது. இந்நிலையில் மந்திரி மனையை புனரமைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் கலந்துரையாடலில் உரிய தீர்மானங்கள் எட்டப்படாமையால் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மந்திரி மனையை புனரமைத்து பாதுகாப்பதற்கு மடம் அறக்கட்டளை பொறுப்பாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தின் திட்ட முன்மொழிவிற்கு அமைய, திணைக்கள மேற்பார்வையுடன், அறக்கட்டளையின் நிதியில் மந்திரி மனையை புனரமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை கடிதம், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

சற்றுமுன் யோஷித ராஜபக்ஷ கைது.!

சற்றுமுன் யோஷித ராஜபக்ஷ கைது.!

by Mathavi
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உயிரிழப்பு.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 17, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக...

மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!

மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!

by Mathavi
June 17, 2026
0

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து நடத்தும் ஒளவை விழா"எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஊடக...

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது.!

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது.!

by Mathavi
June 17, 2026
0

வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது. இவ் வருடத்திற்கான விழா...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரின் சீற்றம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரின் சீற்றம்.!

by Mathavi
June 17, 2026
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு முறைகேடாக யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என்பதனை சுட்டிக்காட்டியும்,...

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது.!

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது.!

by Mathavi
June 17, 2026
0

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்...

உண்மைகளைக் கொட்டுவதே சுரேஷ் சலேவுக்குப் பெருமை.!

உண்மைகளைக் கொட்டுவதே சுரேஷ் சலேவுக்குப் பெருமை.!

by Mathavi
June 17, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வெளிப்படுத்துவதே சுரேஷ் சலே செய்ய வேண்டிய மிகச் சிறந்த செயலாகும் என்று...

பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது; உயர்தரப் பரீட்சையை ஒத்திவையுங்கள்.!

பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது; உயர்தரப் பரீட்சையை ஒத்திவையுங்கள்.!

by Mathavi
June 17, 2026
0

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும்...

மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு பொதுஜன பெரமுன கடும் அழுத்தம்.!

மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு பொதுஜன பெரமுன கடும் அழுத்தம்.!

by Mathavi
June 17, 2026
0

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குவது குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரமடைவதால் சிலர் பதற்றம்.!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரமடைவதால் சிலர் பதற்றம்.!

by Mathavi
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி