27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் பிரபாகரன் அவர்களின் தலைமையில் கீழ் கொடிகாமம் பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தினேஸ் குணதிலக அவர்களுடன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளான எஸ்.ஐ.டிலான் சேமசிங்க, வியஜரட்ன மற்றும் தேவதாஸ் ஆகியோரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிளாலி பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த  டிப்பர் வாகனங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்றையதினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் நாய்க்கு இறுதி சடங்கு !

User1

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

User1

தொலைபேசி உரையாடல் பதிவேற்றம் – கைதானவருக்கு விளக்கமறியல்.!

sumi

Leave a Comment