27.9 C
Jaffna
September 16, 2024
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இலங்கை- இந்திய படையினரின் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

இந்தியா- இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ரா சக்தி இலங்கையின் மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சியகத்தில் ஆரம்பமாகியுள்ளது

இந்த பயிற்சி ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

106 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவினர் இலங்கை இராணுவத்துடனான கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் மித்ரா சக்தி என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும்.

இதன் கடைசி பதிப்பு நவம்பர் 2023 இல் புனேயில் நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபைக் கட்டளையின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ் துணை மரபுசார் சூழ்நிலையில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இரு தரப்பினரின் கூட்டு இராணுவ திறனை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு !

User1

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

User1

யாழில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்..! {படங்கள்}

sumi

Leave a Comment