(படங்கள் இணைப்பு)
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 10ம் திகதி நடைபெற்ற யூசி மாஸ் ( UCMAS) மனக் கணிதப் போட்டியில் மன்னார் UCMAS கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை படைத்து வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றுள்ளனர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் வின்சன்ட் செஷான் ஜெத்னியேல் (Vincent Sheshan Jethniel ) Listening மற்றும் visual ஆகிய இரு பிரிவுகளிலும் (கிராண்ட் சாம்பியன்)Grand Champion, சாம்பியன் (Champion) வெற்றிக் கிண்ணங்களை பெற்றுள்ளார்.
லசால் ஆங்கிலப் பாடசாலை மாணவி யக்கேயு ரெறா ஜெசாறி (Jakkeu Tera Jesarey) சாம்பியன் (Champion) வெற்றிக் கிண்ணத்தையும்,
தோட்டவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி ராஜநாயகம் ரியானா (Rajanayagam Tiyana), கிராண்ட் சாம்பியன் (Grand Champion) வெற்றிக் கிண்ணத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 34 மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் மன்னார் யூசி மாஸ் கல்வி நிலையத்தின் நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியை திருமதி .யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.