27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம்(7) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மன்றில் முன்னிலையாகியுள்ளனார்.

விசாரணைகளின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த வழக்கு விசாரணையின் போது நீதி மன்றத்தால் பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்படிருந்தது.

குறிப்பாக பேராசிரியர் ராஜ்சோம தேவ் தலைமையில் சதோச மனிதபுதைகுழி பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்கான் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், சதோச மனித புதை குழியில் மீட்கப்பட்ட என்புகள் மற்றும் பிற பொருள் மாதிரிகளை வெவ்வேறாக பிரிப்பாதற்கான தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், என்புகளை பால், வயது, மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆரய்வதற்கான செய்ற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஏனைய சான்று பொருட்களை பேரசிரியர் ராஜ் சோம தேவியிடம் கையளிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக அக்டோபர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச,பேராசிரியர் ராஜ்சோம தேவ்,காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டுள்ளனர். 

Related posts

பொகவந்தலாவ பகுதியில் தந்தையால் மகள் சீரழிப்பு.

User1

ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு

sumi

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும்.!

sumi

Leave a Comment