27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லூர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்து இன்று இடம்பெற்றது.  

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். 

அந்த வகையில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள கொடிச்சீலை உபகாரரின் வீட்டில் இருந்து கொடிச்சீலை யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து அங்கிருந்து  கொடிச்சீலை சிறியரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.  

அதனை தொடர்ந்து ஆலய வெளிவீதி வலம்வந்து சுபநேரத்தில் கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது. 

 நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம் பெறவுள்ளது. 

நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர் கைது ; மட்டக்களப்பு ஏறாவூரில் சம்பவம் !

User1

அஞ்சல் பெட்டியில் குளவி கூடு அகற்றுமாறு கோரிக்கை…!

sumi

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது

User1

Leave a Comment