28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் ; சாகர காரியவசம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என நம்புவதாகவும், நாட்டின் பிரஜைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (6) தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளில்.

மொட்டு முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எனவும், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் போட்டி இல்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் மொட்டுக்கும் இடையில் கொள்கைப் பிரச்சினை இருப்பதாகவும், தற்போதைய ஜனாதிபதி தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

திருமலையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குகதாசன் தலைமையில் விசேட கலந்துரையாடல்

User1

அடம்பன் கொடியாய் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

User1

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

User1

Leave a Comment