ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்துக்கோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் தொடர்ச்சியான வழிகாட்டல்களை வெளியிட்டது.