27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்

இலங்கையின் வெறித்தனமான காதலர்கள்-மில்லியன் கணக்கில் விற்று தீர்ந்த ரோஜாக்கள்..!

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் மலர் விற்பனை நிலையங்களில் சிகப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர்கள் கடந்த 13ஆம் திகதி மாலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் ரோஜா பூக்களுக்கு அதிக அளவு கிராக்கி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனி ஒரு ரோஜா மலர் 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரோஜா மலர் கொத்து 3000 முதல் 6000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரோஜாப்பூ விற்பனையில் சுமார் 1200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது..!

sumi

இராணுவ லொறி, முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றுடனொன்று மோதி விபத்து – ஒருவர் பலி !

User1

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து அழிப்பு

User1