கொட்டக்கலை,வலப்பனை பிரதேசங்களில் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய (43) வயதுடைய ஆசிரியர் மற்றும் (35) வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கு 17 வருடம் மற்றும் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் (14.02.2024) மாலை தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய வழங்கியிருந்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
HCR/58/2019 வழக்கு இலக்கம் கொண்ட கொட்டக்கலை பகுதியை சேர்ந்த (43) வயதுடைய பாடசாலை ஆசிரியரான எம்.வைத்தியநாதன் அல்லது சம்பந்தன் என்பவருக்கு எதிராக 17 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இவர் பாடசாலை மாணவி ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்து வந்த இவரின் வழக்கி்ல் நீதி மன்றத்திற்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்துடன் குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில் முதல் குற்றச்சாற்றில் இவருக்கு மேல் நீதிமன்றம் விடுதலை வழங்கியது.
மேலும் இவ் ஆசிரியர் மீது மேலும் இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவ்விரு குற்றச்சாற்றுகள இவர் குற்றவாளியாக இனங்கானப்பட்ட இருருக்கு 17 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதவான் விராஜ் வீரசூரிய பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து லட்சம் அபராத தொகை வழங்க வேண்டுமெனவும்,தண்டணை பணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் இதை வழங்காவிட்டால் மேலும் மூன்று வருடம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இது இவ்வாறிருக்க HCR/92/2019 வழக்கு இலக்கம் கொண்ட வலப்பனை பகுதியை சேர்ந்த சிசுபாலன் புஸ்பராஜ் (35) என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய (14) தீர்ப்பு வழங்கினார்.
தனது உறவுக்கார பிள்ளையான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவருக்கு எதிராக நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் 2013 ஆண்டு முதல் தொடரப்பட்ட வழக்கில் இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கிய நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு 07 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் தண்டனை பணமாக நீதி மன்றத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் இவைகளை செலுத்தாத பட்சத்தில் மேலும் 06 மாதகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
-ஆ.ரமேஸ்-