28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

திருமணமாகாத 35 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!

திருமணமாகாத (35) வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் என நுவரெலியா மேல் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினை
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய (13.02.2024) பகல் வழங்கினார்.

வழக்கு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் கடமை நேரத்தில் 35 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கான தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதபதி விராஜ் வீரசூரிய (13.02.2024) வழங்கினார்.

இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த குற்றவாளியான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருட சிறை தண்டனையும்,தண்டப்பணம் 20 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Related posts

மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு

User1

தாய்மார்கள் விடுத்த குற்றச்சாட்டு

sumi

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது

User1