யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் முல்லைத்தீவில் பல்வேறு உதவிகள் நேற்று ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ,கரடிப்புலவு, பழம்பாசி, மாமடு, தண்டுவான், 17 ஆம் கட்டை ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கு ரூபா 352,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும்,
தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்விகற்க்கும் மிக நீண்ட தூரத்திலிருந்து பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள் ஐவருக்கு ரூபா 235,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் வற்றாப்பளை, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ஜேசுதாஸ் என்பவருக்கு, விவசாய நடவடிக்கைக்காக 70,000 ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் ( Robin) என்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது ஆச்சிரம தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்துள்ளார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.