தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான கெளரவ செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கிழக்கு மாகாணம் சம்பூர் பிரதேசத்தில் இன்றையதினம் கோலாகலமாக ஆரம்பமானது ஜல்லிக்கட்டு.
தமிழகத்தில் இருந்து அனுபவம் மிக்க ஜல்லிக்கட்டு விழா நடத்துனர்களையும் மாடுபிடி வீரர்களையும் கிழக்கு மாகாணத்திற்கு அழைப்பித்து உலகின் கவனத்தை கிழக்கின் மீது திரும்ப வைத்துள்ளார் செந்தில் தொண்டமான்.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் போதிய மேய்ச்சல் நிலங்கள் இன்றி தவித்து வருகின்றனர் ஏலவே இருந்த மேய்ச்சல் நிலங்களை சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி அங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை மிலேச்சத்தனமாக கொன்றுவரும் செயற்பாடுகள் தினம் தோறும் நடைபெற்று வருகின்றது
மேய்ச்சல் நிலத்திற்காக போராடிவரும் ஒரு சமூகம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தென்னிந்திய ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் சிறப்பாக தமது காளைகளை வளர்த்து வருவது இந்த ஜல்லிக்கட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறான வீரம் மிக்க காளைகள் கால்நடைகள் மேய்ச்சல் நிலத்தில் வைத்து அழிக்கப்படுவதற்கு எதிராக இந்த ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழுவினரும் கிழக்கு மாகாண ஆளுநரும் வருகை தந்திருந்த அமைச்சர்களும் தமிழ் சிங்கள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த வகையில் ஒன்றிணைந்து செயலாற்றி இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் இவ்வாறான வீர விளையாட்டுக்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும்.
எங்கள் பாரம்பரியங்களே எங்களின் அடையாளம்… ஏறு தழுவுதல் தமிழனின் வீர விளையாட்டு.