• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

selvan by selvan
July 4, 2026
in இலங்கை செய்திகள்.
0
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படுகிறது. பாடசாலைகள், பொது இடங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் காணி நிலங்கள் போன்ற 50க்கும் அதிகமான இடங்களில் டெங்கு பெருக்கத்திற்கான புழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனை கட்டுப்படுத்த மக்கள் சுற்றுப்புறச் சூழலையும், வீட்டின் உள்ளே நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை (Fridge) அடிக்கடி கவனித்து சுத்தம் செய்ய வேண்டும்.

வீதியோரங்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் பொதுமக்கள் கழிவுகளையோ குப்பைகளையோ கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.கை விடப்பட்டு கிடக்கும் காணி நிலங்களை சுத்தப்படுத்துவதற்கு உரிய சுகாதார மருத்துவ அதிகாரிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்டால், குறிப்பாகச் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயுடையவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் மருத்துவரை நாட வேண்டும்.

காய்ச்சல் குறையாத பட்சத்தில், இரண்டு நாட்களில் மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று Full Blood Count (FBC) மற்றும் டெங்குவிற்கான NS1 பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும்.அரச மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் பணியாளர்கள் அனைவரும் தினமும் குறைந்தது அரை மணித்தியாலங்கள் (30 நிமிடங்கள்) தங்களது வளாகத்தைச் சுத்தப்படுத்துவதற்கு ஒதுக்க வேண்டும்.

டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய சாத்தியமான இடங்களை இனங்கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தல்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.கணிசமான அளவில் நுளம்பு பெருக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பாடசாலை வளாகங்களில் வார அடிப்படையில் முழுமையாக பரிசோதிக்க வேண்டும்

தொண்டு நிறுவனங்கள், முப்படையினர், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொது இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

காணி மற்றும் பொது இடங்களில் நீர் தேங்க கூடிய வெற்றுப் பாத்திரங்கள், கொள்கலன்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்
பொதுமக்கள் தங்களது வீட்டுச் சூழலை தினமும் அரை மணித்தியாலங்கள் சுத்திகரிக்க வேண்டும்.சேகரிக்கப்படும் குப்பைகளை நீர் தேங்காத வண்ணம் முறையான வழிகளில் அழிக்க அல்லது அப்புறப்படுத்த வேண்டும். சமீபத்திய கள ஆய்வுகளின்படி 1,500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விதிகளுக்கு புறம்பாக இருந்த பல வீடுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்ட இடங்கள் அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களில் டெங்கு குடம்பிகள் (Larvae) பெருகுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

டெங்குவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள “சுய தூய்மையும், கூட்டுப் பொறுப்பு” மிக அவசியமானதாகும்.

இலங்கையின் வட மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

முசலி மற்றும் மாந்தை மேற்கு ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார் நகர் பகுதி 23 நோயாளர்களும்,நானாட்டான் பகுதியில் கடந்த காலங்களில் அதிகமாக நோயாளர்கள் இருந்தபோதிலும், இந்தத் தடவை 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மடு பகுதியில் 6 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கிய புனித யாத்திரை இன்று ஆரம்பம்!

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கிய புனித யாத்திரை இன்று ஆரம்பம்!

by selvan
July 4, 2026
0

மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி செல்லும் பாதை யாத்திரை இன்று 04 ம் திகதி திரு.செல்வம் தலைமையில் மறே, நல்லதண்ணி சாமி...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!

by selvan
July 4, 2026
0

இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணையை...

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

by selvan
July 4, 2026
0

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா...

குடத்தனையில் கோலாகலமாக ஆரம்பமானது ‘செல்வா பிரீமியர் லீக்-03’ கிரிக்கெட் தொடர்!

குடத்தனையில் கோலாகலமாக ஆரம்பமானது ‘செல்வா பிரீமியர் லீக்-03’ கிரிக்கெட் தொடர்!

by selvan
July 4, 2026
0

யாழ். குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் 'செல்வா பிரீமியர் லீக் - 03' (SPL-03) கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை 9.30 மணியளவில் மிகச் சிறப்பாக...

திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!

திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!

by selvan
July 4, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேடானது நேற்றிரவு திடீரென பற்றியெரிந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,மானிப்பாய் பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு மற்றும்...

நெடுந்தீவின் குடிநீருக்கு அநுர அரசிடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

நெடுந்தீவின் குடிநீருக்கு அநுர அரசிடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

by selvan
July 4, 2026
0

நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை முழுமையாக...

கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

by selvan
July 4, 2026
0

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை "eAyurvedic" எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி...

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

by selvan
July 4, 2026
0

அம்பாறையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு...

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

by selvan
July 4, 2026
0

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின்அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின் அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

by selvan
July 4, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி