• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தமிழக அமைச்சர் சரத்குமார்  போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!

selvan by selvan
July 1, 2026
in இந்திய செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழக அமைச்சர் சரத்குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான உள்கட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் மனிதவள முகாமைத்துவத் துறை அமைச்சராக சரத்குமார் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் காணொளியில், அமைச்சர் சரத்குமார் கோக்கைன் உள்ளிட்ட போதைப்பொருளைப் பயன்படுத்துவதாகக் கூறி எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சர் சரத்குமார், உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தனது குழந்தைக்கு மாத்திரையை தூளாக்கி வழங்கியபோதுதான் அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துகள் மற்றும் காணொளிகள் பரவி வருகின்றன.

சட்டசபையில் பாதீடு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், ஏழு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் விஜய் தலைமையிலான அரசாங்கத்திற்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சம்பவத்தின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த உத்தரவின் அடிப்படையில், அமைச்சர் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைமையகம் விசாரணை நடத்தி வருவதாக எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

விசாரணையின் இறுதியில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அமைச்சர் சரத்குமார் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Posts

134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

by selvan
July 1, 2026
0

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'சரிகம' நிறுவனத்திற்கு...

இந்தியாவில் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்!

by selvan
July 1, 2026
0

மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவிலும் பெட்ரோல், டீசலுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது....

தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் இளைஞனும் சிறுமியும் தூக்கிட்டுத் தற்கொ*லை

தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் இளைஞனும் சிறுமியும் தூக்கிட்டுத் தற்கொ*லை

by selvan
July 1, 2026
0

தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞரும் 16 வயது சிறுமியும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸிக்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸிக்கு விஜயம்

by selvan
June 30, 2026
0

மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று சீஷெல்ஸ் அரசு இல்லத்திற்குச்...

மும்பையில் 15000 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

by selvan
June 29, 2026
0

மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, மும்பையில் ஊர்வலம்...

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

by Mathavi
June 27, 2026
0

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்...

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!

by selvan
June 26, 2026
0

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

by selvan
June 25, 2026
0

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 5 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் பரப்பி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட 36...

வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!

வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!

by selvan
June 25, 2026
0

வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (25) ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

by selvan
June 25, 2026
0

‘எல்-நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை குறையும் என்பதால் தமிழகத்தின் திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் வறட்சிப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி