உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற நான்கு சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சீனர்களும் 30 வயது மதிக்கத்தக்க வர்த்தகர்கள் ஆவர்.

சந்தேக நபர்களான நான்கு சீன வர்த்தகர்களும் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து புறப்பட்ட தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘TG307’ என்ற விமானம் மூலம் இன்று (01) புதன்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் நாட்டை வந்தடைந்து விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள, “கிரீன் சேனல்” வழியாக எவ்வித சோதனையுமின்றி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவர்களை இடைமறித்து சோதனையிட்டனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளுக்குள் மிகவும் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகள் அடங்கிய 360 சிகரெட் கார்டன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு சீன வர்த்தகர்களும் தற்போது சுங்கத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பாரிய சிகரெட் கடத்தலின் பின்னணி மற்றும் விநியோக வலையமைப்பு குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

43 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

59 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0