• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!

Mathavi by Mathavi
July 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் நிலவும் மந்தகதி மற்றும் தாமதங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டார்.

கொழும்பில் ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது,
“கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியான தில்ஷி அம்சிகா என்ற சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாடசாலை மாணவி ஒருவருடன் தொடர்புடைய மிக மோசமான சம்பவமாகும். இந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்கும் மேலாகியும், இதற்கான மரண பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்ற மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அது குறித்த இறுதித் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வரவுப் புத்தகங்கள் போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இறுதி சிசிரிவி காட்சிகளின் அறிக்கை இன்னும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கிய வழக்குகளில் நிலவும் மந்தகதி மற்றும் பொலிஸாரின் தாமதம் பெரும் வேதனையளிக்கின்றது.

சிறுவர் விவகார அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த சில மாதங்களில் மட்டும் 1,413 சிறுவர்கள் மற்றும் பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 498 வழக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரிப்பதற்குக் காரணம், வழக்கு விசாரணைகளில் ஏற்படும் கடுமையான தாமதங்களும், உரிய சட்டக் கோப்புகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை எடுக்கும் காலதாமதங்களுமே ஆகும்.

கடந்த மே மாத தொடக்கத்தில், பிரதமரின் அறிவுறுத்தலின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய விசேட குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆராயப்பட்ட போதிலும், இன்னமும் நடைமுறையில் மந்தகதியான போக்கே காணப்படுகின்றது.

எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டுமாயின், விசாரணைகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும். கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு, எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுக்கக் கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Related Posts

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

by Mathavi
July 1, 2026
0

'மிஸ்டர் கொத்து' நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்கிரமநாயக்க, மகரகம பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பு சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த...

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

by Mathavi
July 1, 2026
0

எல்பிட்டிய பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி, கைவிலங்குடன் சந்தேக நபர்...

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 1, 2026
0

குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், "முது" என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது.!

by Mathavi
July 1, 2026
0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற நான்கு சீனப் பிரஜைகள் சுங்க...

ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் இலஞ்சம்; சட்டத்தரணிகளுக்கு எதிராக முறைப்பாடு.!

ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் இலஞ்சம்; சட்டத்தரணிகளுக்கு எதிராக முறைப்பாடு.!

by Mathavi
July 1, 2026
0

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான 'ஹரக் கட்டா' என்பவரை விடுவிப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சட்டத்தரணிகளுக்கு எதிராக இலஞ்ச,...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொ*லை.!

by Mathavi
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த...

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில்.!

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில்.!

by Mathavi
July 1, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமை காரணமாக நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தரத் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு...

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

by selvan
June 30, 2026
0

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன்,...

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

by selvan
June 30, 2026
0

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள்...

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

by selvan
June 30, 2026
0

வவுனியா வடக்கு - நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 29.06.2026இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். குறிப்பாக இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி