உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

ஜூன் 24 முதல் 30 வரை கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வு விஜயத்தின் நிறைவாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, இலங்கையின் பேரண்டப் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய நாடுகளை விட, இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகத் தூதுக்குழுவினர் பாராட்டினர்.

அத்துடன், நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 7 ஆவது மீளாய்வு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்போது பொருளாதார வளர்ச்சியை மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற சவால்கள் இருப்பினும், சீர்திருத்தப் பாதையில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், இரு தரப்பினரும் இலங்கையின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

64 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0