தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
நேற்றைய முதல் நாள் முதல் இனிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 139ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.பதிலுக்கு முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய முழங்காவில் மகா வித்தியாலய அணியினர் 202ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.
பதிலுக்கு இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த தர்மபுரம் மத்திய கல்லூரி 158ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.95ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இனிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முழங்காவில் மகா வித்தியாலய அணி 8
இலக்குகளை இழந்து 93ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வர போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.போட்டியின்
ஆட்டநாயகனாக தர்மபுரம் மத்திய கல்லூரி வீரர் R. தமிழ்வானன் ,
சிறந்த துடுப்பாட்ட வீரராக தர்மபுரம் மத்திய கல்லூரி வீரர் R.தமிழ்வானன்
சிறந்த பந்துவீச்சாளராக முழங்காவில் மகா வித்தியாலய அணி வீரர் V.சஞ்சயனும் ,தொடரின் சகலதுறை வீரராக தர்மபுரம் மத்திய கல்லூரி வீரர் R.தமிழ்வானனும் ,சிறந்த களத்தடுப்பாளராக முழங்காவில் மகா வித்தியாலய அணி வீரர் எஸ்.அருட்செல்வனும் தெரிவு செய்யப்பட்டனர்.










