உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தமிழக அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தமிழ்நாடு மாநிலத்தின் புதிய சமூக நீதித்துறை அமைச்சரும் நீண்டகால அரசியல் செயற்பாட்டாளருமான வன்னி அரசை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சென்னையிலுள்ள சமூக நீதித்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துடனும், அவர்களது உரிமைகளுடனும் நீண்டகாலமாகத் தன்னை இரண்டறக் கலந்துகொண்டு குரல் கொடுத்து வரும் ஒரு மூத்த அரசியல் தலைவரான வன்னி அரசு, அண்மையில் தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.

இதனையொட்டி, அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்தச் சந்திப்பின் நினைவாகத் தனக்கே உரித்தான பாணியில் முக்கிய வரலாற்றுப் புத்தகம் ஒன்றையும் அமைச்சருக்குப் பாராட்டி வழங்கிவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நீதித்துறை அமைச்சராகவும், அக்கட்சியின் மாநில விவகாரங்கள் குறித்த கொள்கைக் குழுவின் முக்கிய அங்கத்தவராகவும் அமைச்சர் வன்னி அரசு பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் சுருக்கமாக ஆராயப்பட்டது என்று தெரியவருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0