• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!

Mathavi by Mathavi
June 17, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து நடத்தும் ஒளவை விழா”எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஊடக சந்திப்பு கல்லடி கிறீன்கார்டன் ஹோட்டலில் மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து நடத்தும் “ஒளவை விழா” தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வுகளை வெளி உலகிற்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகவியலாளர்களுக்கு கதிரவன் பட்டிமன்றப் பேரவை சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

எதிர்வரும் 21ஆம் திகதி, இந்த மாத ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு, மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒளவை சிலை முற்றத்திலே பிரம்மாண்டமான ஒளவை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேல்முருகன் சகோதரர்கள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலே புலமைமிக்க மூதாட்டியான ஒளவையாரின் திருவுருவச் சிலையினை நிறுவியுள்ளனர். அதன் நிமித்தம் கடந்த 2020ஆம் ஆண்டு முதலாவது ஒளவை விழா, கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையோடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது விழாவினை ஏற்பாடு செய்த காலங்களிலெல்லாம் விலைவாசி ஏற்றம், கொரோனா தொற்று போன்ற ஏதோ ஒரு வகையிலான அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக அதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இந்த விழாவினைச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எனினும், தற்பொழுது பிரம்மாண்டமான போட்டிகளை நடத்தியதன் நிமித்தம் இந்த விழாவானது தற்பொழுது நடைபெற தயாராக இருக்கின்றது.

மிக முக்கியமாக, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களின் விவாதத் திறன்களை வெளிக்கொணரும் வகையில், மாவட்ட ரீதியாக விவாதப் போட்டி நடத்தப்பட்டு இரண்டு அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இடையிலான போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு அணிகள் இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளன. மேலும், மாவட்ட ரீதியாக அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தப்பட்ட வில்லுப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான விருதுகளும் பணப் பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய ரீதியாக கவிதைப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, இலங்கை முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 131 கவிதைகள் வந்தடைந்துள்ளன. அவற்றுக்கான பரிசுகளும் பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த ஒளவை விழாவின் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால், நமக்காக, மக்களுக்காக, கலை இலக்கியத்திற்காக, கலாச்சாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சார்ந்து செயல்பட்ட மூதாதையர்களின் சிலைகளைப் பார்க்கும்போது, வளர்ந்து வரும் இளம் சமுதாயத்திற்கு அந்தச் சிலை எதைக் குறிக்கிறது, ஏன் நிறுவப்பட்டிருக்கிறது, அவர்கள் செய்த அற்புதங்கள் மற்றும் விளக்கங்கள் என்ன, இதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சிந்தனை உருவாக வேண்டும். அந்த சிந்தனையின் ஊடாக நல்லவற்றை எண்ணி, நல்லவற்றைச் செய்து, நற்பிரஜையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அந்த சிந்தனையை இன்னும் மேலோங்கச் செய்வதற்காகவே, சிலை நிறுவப்பட்ட இடங்களிலே நிகழ்வுகள் நடத்துவது வழக்கமாகும். அதன்படி, ஒளவை சிலை முற்றத்திலே 21ஆம் திகதி பிரம்மாண்டமாக இந்த விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பல அறிஞர்கள் வரவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Posts

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஆறு பெண்கள் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு பெண்கள்...

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

by Mathavi
June 21, 2026
0

"சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானியாக அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது." -...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

by Mathavi
June 21, 2026
0

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நஷ்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

by Mathavi
June 21, 2026
0

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர்,...

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

by Mathavi
June 21, 2026
0

வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக்...

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 21, 2026
0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19)...

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

by Mathavi
June 21, 2026
0

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழாவானது நேற்றையதினம் மருதனார்மடத்தில் உள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய 22 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்றும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 6 ஆயிரம் முதல்...

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை இன்னமும் கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது அரசு.!

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை இன்னமும் கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது அரசு.!

by Mathavi
June 21, 2026
0

"பாதுகாப்பான காணி இல்லை என்ற காரணத்தைக் கூறி, 'டித்வா' பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக அகதிகளை அநுர அரசு இன்னமும் தற்காலிக கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது. இந்நிலைமை கண்டி, நுவரெலியா...

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு இரண்டு வருடங்களுக்குள் தீர்வு காண்போம்.!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு இரண்டு வருடங்களுக்குள் தீர்வு காண்போம்.!

by Mathavi
June 21, 2026
0

"காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையைத் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டு செல்வதற்கு எமது அரசு விரும்பவில்லை. எதிர்வரும் இரண்டு வருட காலங்களுக்குள் இந்த விசாரணைகள் அனைத்தையும் முழுமையாக முடிவுக்குக் கொண்டு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி