உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மீரிகம, கிதுல்வல இஹல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல்லேகம பகுதியில், 06 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இன்று 16ஆம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பூகொட மற்றும் கிரிந்திவெல, கொஸ்கம, பாதுகா மற்றும் கட்டுநாயக்க, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தங்கச் சங்கிலி கொள்ளைகள் மற்றும் சொத்துக் திருட்டுகளுடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வாள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளில் இருந்து உருக்கப்பட்ட 09 தங்கக் கட்டிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டான பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

50 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

27 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0